Main Menu

ராணி எலிசபெத் முன்னிலையில் புட்டிங் தயாரித்த கொள்ளுப்பேரன்

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ராணி எலிசபெத் முன்னிலையில் அவரது கொள்ளுப்பேரன் ஜார்ஜ், புட்டிங் தயாரிப்பது போன்ற புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

பக்கிங்காம் அரண்மனை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அந்த புகைப்படங்களில், ராணி எலிசபெத், அவரது மகன் சார்லஸ், பேரன் வில்லியம்ஸ் ஆகியோர் உடனிருக்க கொள்ளுப்பேரனும், இளவரசர் வில்லியம்சின் மூத்த மகனுமான குட்டி இளவரசர் ஜார்ஜ், கிண்ணங்களில் பாரம்பரிய கிறிஸ்துமஸ் புட்டிங்கை தயாரித்துக் கொண்டிருக்கிறார்.

பிரிட்டன் அரச குடும்பத்தின் 4 தலைமுறையை சேர்ந்தவர்கள் ஒன்றாக காட்சியளிக்கும் இந்த புகைப்படங்கள் மூலம் கிடைக்கும் வருவாய், முன்னாள் மற்றும் இந்நாள் ராணுவ வீரர்களின் நலநிதிக்கு அளிக்கப்படவுள்ளது.

பகிரவும்...