Main Menu

வடகொரிய தலைவர் எங்கே? தொடரும் வதந்திகளுக்கு தென்கொரியா முற்றுப்புள்ளி

வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் குறித்த பல்வேறு வதந்திகளுக்கு, தென் கொரியா முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

வடகொரியாவில் நடைபெற்ற அரசு மற்றும் சில முக்கிய நிகழ்ச்சிகளில் கிம் ஜோங் பங்கேற்காததைத் தொடர்ந்து, அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது போன்ற பல்வேறு வதந்திகள் பரவின.

கிம் ஜோங் உன், மூளைச்சாவு அடைந்து விட்டதாகவும், இருதய சிகிச்சையின் பின் சுயநினைவு அற்ற நிலையில் உயிருக்கு போராடி வருவதாகவும் பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வந்தன.

இந்த நிலையில் வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் உயிருடன் நலமாக இருப்பதாக தென் கொரிய ஜனாதிபதி மூன் ஜே-இன் உடைய பாதுகாப்பு ஆலோசகர் தெளிவுபடுத்தியுள்ளார்.

தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த செவ்வியொன்றில், பாதுகாப்பு ஆலோசகர் மூன் சூங்-இன் கூறுகையில், “கிம் ஜோங் உன் உயிருடன் நலமாக இருக்கிறார். வடகொரியாவின் கிழக்குப் பக்கத்தில் இருக்கும் வோன்ஸான் என்ற பொழுதுபோக்கு நகரில் ஏப்ரல் 13ஆம் திகதியில் இருந்து கிம் தங்கியுள்ளார்.

அப்பகுதியில் எந்த விதமான சந்தேகத்துக்கு இடமான நடமாட்டமும் தென்படவில்லை’ என விளக்கம் அளித்துள்ளார்.

ஆசிய நாடான வட கொரியாவின் தலைவரான 36 வயதான கிம் ஜோங் உன், 2011ஆம் ஆண்டு தன் தந்தை, இரண்டாம் கிம் ஜோங்கின் மறைவுக்குப் பிறகு, நாட்டின் அதிகாரத்தை கையில் எடுத்துக் கொண்டார்.

அதன்பிறகு உலகையே திரும்பி பார்க்க வைத்த கிம் ஜோங் உன், கடந்த 15ஆம் திகதி, அவருடைய தாத்தாவும், வடகொரியா நிறுவனருமான கிம் இரண்டாம் ஜோங்கின், 108வது பிறந்த நாள் நிகழ்ச்சியில் உன் பங்கேற்கவில்லை.

இந்தநிலையிலேயே கிம் ஜோங் உன் என்ற கேள்வி சர்வதேச அளவில் எழத் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...