Main Menu

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்

ஒரு பாலினத் திருமணங்களை சட்டபூர்வமாக்கும் சட்டமூலத்துக்கு தாய்லாந்து பாராளுமன்ற கீழ் சபை இன்று அங்கீகாரம் வழங்கியது. 

இச்சட்டமூலத்துக்கு 399 எம்.பிகள் ஆதரவாகவும் 10 எம்.பிகள் எதிராகவும் வாக்களித்தனர்.

இதன்மூலம், தென்கிழக்காசியாவில் ஒருபாலினத்  திருமணத்துக்கு அங்கீகாரம் வழங்கும் நாடாக விளங்கவுள்ளது தாய்லாந்து.

இச்சட்டமூலம் அமலுக்கு வருவதற்கு பாராளுமன்றத்தின் செனட் சபையும் மன்னரும் அங்கீகாரம் வழங்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...