Main Menu

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப் பட்டோரின் எண்ணிக்கை 30 இலட்சத்தைக் கடந்தது!

உலகம் முழுவதும் தீவிரமாகப் பரவியுள்ள கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30 இலட்சத்தைக் கடந்துள்ளது.

சீனாவின் வுஹான் நகரத்தில் பரவத் தொடங்கிய இந்த வைரஸ் தொற்று 200இற்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளதுடன் இந்த வைரஸால் தற்போது வரையான காலப்பகுதியில் 30 இலட்சத்து 3 ஆயிரத்து 352 பேர் தொற்றுக்கு உள்ளானமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அத்துடன், உலகம் முழுவதும் இன்றைய நாளில் இதுவரையான நேரத்தில் 179 பேரின் மரணங்கள் பதிவாகியுள்ளதுடன் மொத்தமாக 2 இலட்சத்து 7 ஆயிரத்து 94 பேர் மரணித்துள்ளனர்.

இதேவேளை, பாதிக்கப்பட்ட 30 இலட்சம் பேரில் 8 இலட்சத்து 82 ஆயிரத்து 567 பேர் இதுரையான காலப்பகுதியில் வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளமை பதிவாகியுள்ளது.

இந்த வைரஸ் தொற்று, அமெரிக்காவில் பெரும் மனித அழிவை ஏற்படுத்தியுள்ளதுடன், இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் மற்றும் பிரித்தானியாவிலும் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் மட்டும் 10 இலட்சம் பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ள நிலையில், ஐரோப்பிய நாடுகளில் இதுவரை கிட்டத்தட்ட 13 இலட்சம் பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், ஆசியா மற்றும் ஆபிரிக்க நாடுகளில் கணிசமான பாதிப்பு உள்ளபோதும் உயிரிழப்புக்கள் ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...