Main Menu

ரஷ்ய – ஐரோப்பிய எரிவாயுக் குழாய் திட்டத்துக்கு தடை!

ரஷ்யாவிற்கும், ஜேர்மனிக்கும் இடையிலான எரிவாயுக் குழாய் பொருத்துவதற்கான திட்டத்தை மேற்கொள்ளும் நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளது.

ரஷ்யாவிலிருந்து ஜேர்மனிக்கு எரிவாயு விநியோகத்தை விஸ்தரிக்கும் வகையில், இரு பகுதிகளுக்கும் இடையே கூடுதலாக இரு எரிவாயுக் குழாய் இணைப்பை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த திட்டத்திற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த நிலையில், புதிய திட்டத்தில் பங்கேற்கும் நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடை விதிக்கும் உத்தரவில் ட்ரம்ப் கையொப்பமிட்டுள்ளார்.

அத்துடன், ரஷ்யாவிற்கும், துருக்கிக்கும் இடையிலான ‘துர்க்ஸ்ட்ரீம்’ திட்டத்தில் ஈடுபடும் நிறுவனங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக குறித்த திட்டங்களுக்காக கடலடி குழாய்கள் பதிக்கும் கப்பல் நிறுவனங்கள் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பகிரவும்...