Main Menu

மிருகக்காட்சி சாலையில் விலங்குகளுக்கு கிறிஸ்மஸ் விருந்து

லண்டன் நகரில் கிறிஸ்மஸ் பண்டிகை கொண்டாட்டங்கள் ஆரம்பமாகியுள்ள நிலையில், மிருகக்காட்சிசாலையில் விலங்குகளுக்கு கிறிஸ்மஸ் விருந்து வழங்கப்பட்டுள்ளது.

இந்த ZSL மிருககாட்சியகத்தில் மோதிர வால் கொண்ட லெமூர்ஸ்க்கு கிறிஸ்மஸ் தொப்பிகளில் வைத்து இனிப்பு உருளைக்கிழங்கு வழங்கப்பட்டது.

மேலும் பொலிவியன் அணில் குரங்குகள் தங்களுக்கான மெழுகுப் புழுக்கள் மற்றும் ஸ்ட்ரோபெரி பேஸ்ட் உணவுகளை கூட்டம் கூட்டமாக உண்டு மகிழ்ந்திருந்தன.

அசிம் என்ற சுமத்ரான் புலி ஒன்றுக்கு பாரம்பரிய பரிசு பெட்டியில் அதற்கான வான்கோழி உணவு வழங்கப்பட்டது.

பகிரவும்...