வவுனியா உயிரிழை அமைப்பில் வட கிழக்கு மாகாணங்களில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட சுமார் 163 பேர் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டு கழுத்து மற்றும் இடுப்புக்கு கீழ் இயங்காத நிலையில் வாழ்வா சாவா என்ற போரட்டத்தில் துடித்து வருகின்ற நிலையில் இவர்கள் உறங்குவதற்கும், இருப்பதற்கும் கூட பல இன்னல்களை அனுபவித்து வருகின்றார்கள் இவ்நிலையில் உயிரிழை அமைப்பினர் அவர்களுக்கான மெத்தைகள் மற்றும் அடிப்படையான மருத்துவ வசதிகளை தந்துதவும்படி வட்டு இந்து வாலிபர் சங்கத்திடம் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

இதனடிப்படையில் நாம் முதற்கட்டமாக கனடாவினை சேர்ந்த தனயசிங்கம் பரமநாதன் அவர்களின் நிதி அனுசரனையுடன் சுமார் 57000 ரூபா பெறுமதியான 17 மெத்தைகளை வழங்கியிருந்தோம். இங்கு பாதிக்கப்பட்டுள்ளவார்கள் முன்னைய காலத்தில் எமக்காக பல தியாகங்களை செய்தவர்கள் என்பதனை மறந்திடமால் எமது அமைப்பின் ஊடாக தாயக உணர்வுள்ள நண்பர்களிடமும், பொது மக்களிடமும் இவர்களுக்கான மனிதாபிமான உதவிகளை செய்யும்படி தாழ்மையாக கேட்டிருந்தோம். இதனடிப்படையில் இன்று (20.07.2015) படுக்கை புண்ணினால் பாதிப்புற்று உயிருக்காக போராடிவரும் 15 பேருக்கு water mattress care, provide iodine solution(mdcom), gauze roll, sodium chloride IV soln, zinc oxide plaster  என்பனவற்றினை வழங்கியுள்ளோம்.

இதற்கான நிதி அனுசரனையினை புலம்பெயர் உறவுகளான மனிதநேயமுள்ள ரூபன்(கனடா), உதயகுமார் (பிரான்ஸ்); மற்றும் கமாலம்பிகை (பிரான்ஸ்); ஆகியோர் வழங்கியுள்ளனர். உயிரிழை அமைப்பினர் தற்கால அரசியல் தரப்பின் உதவிகள் கிடைக்காத நிலையில் புலம்பெயர் உறவுகளான ரரூபன், உதயகுமார் மற்றும் கமாலம்பிகை உயிரிழை அமைப்பினருக்கு உதவியுள்ளனர். எமது புலம்பெயர் உறவுகளே நாம் உங்களிடம் தயவாக கேட்டுக்கொள்வது யாதெனில் எம்மால் போற்றப்பட வேண்டியவர்கள் எம்மிடம் கையேந்த வேண்டியநிலை ஏற்பட்டுள்ளது.

அவர்களின் உயிரினை காப்பற்றுவதற்காக உங்களால் இயன்ற மருத்துவ உதவிகளை ஏதேனும் செய்யுங்கள். இதுவரை காலமும் வட்டு இந்து வாலிபர் சங்கத்தின் ஊடாக யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட எமது உறவுகளுக்கு அவர்களின் கல்வி மற்றும் வாழ்வியல் மேம்பாட்டுக்காக மனிதபிமான உதவிகளை வழங்கிய மனிதநேயமுள்ள உள்ளங்களுக்கு எமது சங்கத்தின் சார்பில் இத் தருணத்தில் மீண்டும் மீண்டும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம். தொடர்ந்தும் அவர்களுக்கான உதவிகளை செய்வீர்கள் என நம்புகின்றோம். (வட்டு இந்து வாலிபர் சங்கம்.)

20.07.2015இல் உயிரிழை அமைப்பிற்கு உதவி வழங்கியவர்களின் விபரம் வருமாறு,

Uthayakumar   பிரித்தானியா லண்டன்  62,000 Rs

T.Ruban Canada  40,000 Rs

S.Kamalampikai  (லாலா ரவி)  France  9,058 Rs

Total   1,11,058/-

photo 1 (2)photo 2 (2)photo 3 (2)photo 4 (2)
photo 2
photo 3