Main Menu

முன்னாள் பிரதமர்களுக்கு வழங்கிய சிறப்பு பாதுகாப்பு நீக்கம்!

முன்னாள் பிரதமர்கள் மற்றும் அவரிகளின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட சிறப்பு பாதுகாப்பை விலக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்காக சிறப்பு பாதுகாப்பு குழுவின் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சிறப்பு பாதுகாப்பு குழு (எஸ்.பி.ஜி.) சட்டப்படி, பிரதமர், அவருடைய குடும்ப உறுப்பினர்கள், முன்னாள் பிரதமர்கள், அவர்களுடைய குடும்ப உறுப்பினர்கள் ஆகியோருக்கு சிறப்பு பாதுகாப்பு குழுவின் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது.

குறித்த பாதுகாப்பை நீக்குவதற்காக புதிய சட்டமொன்று உருவாக்கப்பட்டுள்ளதுடன், அந்த சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை கடந்த 20ஆம் திகதி ஒப்புதல் அளித்துள்ளது.

இதையடுத்து, இந்த திருத்தம் அடங்கிய சட்டமூலம் அடுத்த வாரம் நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்படுகிறது. இதனை நாடாளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சர் அர்ஜுன்ராம் மெக்வால் தெரிவித்துள்ளார்.

இதேவேளை முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் குடும்ப உறுப்பினர்களுக்கு சிறப்பு பாதுகாப்பு நீக்கப்பட்ட நிலையில், இந்த சட்டமூலம் மக்களவையில் தாக்கல் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...