Main Menu

இந்தியாவில் தினமும் 26 ஆயிரம் தொன் பிளாஸ்டிக் கழிவுகள் உற்பத்தி!

இந்தியாவில் தினமும் 26 ஆயிரம் தொன் பிளாஸ்டிக் கழிவுகள் உற்பத்தி செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் மக்களவையில் இதனைத் தெரிவித்துள்ளார்.

இவற்றில் 40 சதவீதம் சேகரிக்கப்படுவதில்லை எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

விரைவாக விற்பனையாகும் நுகர்பொருளுக்கு பிளாஸ்டிக் அதிகம் பயன்படுத்தப்படுவதால் அதன் தேவை அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை என்ற சவாலை இது ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

நாள்தோரும் 25,940 தொன் பிளாஸ்டிக் கழிவு உற்பத்தியாவதாக கணக்கிடப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடு முழுவதும் பிளாஸ்டிக் உற்பத்தி மற்றும் மறுசுழற்சிக்கு என பதிவு செய்யப்பட்ட நான்காயிரத்து 773 தொழிற்சாலைகள் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஒவ்வொரு நாளும் சுமார் 15 ஆயிரத்து 384 தொன் பிளாஸ்டிக் கழிவுகள் மறுசுழற்சி செய்யப்படுவதாகவும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

பகிரவும்...