Main Menu

மீனவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்தவொரு ஒப்பந்தத்தையும் பிரான்ஸ் ஏற்காது – அமைச்சர்

பிரெக்ஸிற்க்கு பிந்தைய வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக பிரித்தானியாவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் சிக்கல் காணப்படுவதாக பிரான்ஸ் தெரிவித்துள்ளது.

மேலும் மீனவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் எட்டப்படும் ஒப்பந்தத்தினை பிரான்ஸ் நிராகரிக்கும் என பிரான்சிற்கான ஐரோப்பிய விவகார அமைச்சர் கிளெமென்ட் பியூன் தெரிவித்துள்ளார்.

ஜனவரி மாதம் பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறியதிலிருந்து, ஒவ்வொரு தரப்பினரும் ஒப்பந்தத்தை அடைவதற்கு சலுகைகளை வழங்குமாறு மற்றொறு தரப்பிற்கு வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...