Main Menu

மிஸ்.பிரான்ஸ் அழகிப் போட்டிக்கு திரு நங்கைகளும் கலந்து கொள்ளலாம்

மிஸ்.பிரான்ஸ் அழகிப்போட்டில் திருநங்கைகளும் கலந்துகொள்ளலாம் என மிஸ்.பிரான்ஸ் அழகிப்போட்டி இயக்குனர் தெரிவித்துள்ளார்.

இன்று புதன்கிழமை வானொலி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற இயக்குனர் Alexia Laroche-Joubert, அதன்போதே இதனை தெரிவித்தார். “நாங்கள் எப்போதும் சொல்வதுதான். நீங்கள் விதிகளை சரியாக வாசித்தால்… விண்ணப்பத்தின் போதே உங்களுடைய சமூக அடையாளமாக பெண் என இருந்தால் நீங்கள் தாராளமாக விண்ணப்பிக்கமுடியும்!” என Alexia Laroche-Joubert தெரிவித்தார்.

“அழகிப்போட்டியில் திருநங்கையாக இருப்பதெல்லாம் ஒரு தடையில்லை.” என தெவித்த அவர், மிஸ் பிரான்ஸ் அழகிப்போட்டியில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவர தாம் தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்தார்.  

பகிரவும்...