Main Menu

மியன்மார் தேர்தல்: ஆங் சான் சூகியின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கட்சி முன்னிலை!

மியன்மாரில் நடைபெற்ற பொதுத்தேர்தலில், அரசின் தலைவர் ஆங் சான் சூகியின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கட்சி முன்னிலை பெற்றுள்ளதாக அண்மைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் பொதுத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் மக்கள் அதிக அளவில் வாக்களித்தனர். இதுவரை இல்லாத அளவுக்கு அதிக எண்ணிக்கையில் வாக்குகள் பதிவாகியுள்ளன.

கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் நடத்தப்பட்ட இந்த தேர்தலில் மக்கள் அதிக அளவில் வாக்களித்தனர். இதுவரை இல்லாத அளவுக்கு அதிக எண்ணிக்கையில் வாக்குகள் பதிவாகியுள்ளன.

மாலையில் வாக்குப்பதிவு முடிவடைந்ததும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முன்கூட்டியே பதிவு செய்யப்பட்ட வாக்குகள் மற்றும் தபால் வாக்குகள் முதலில் எண்ணப்பட்டன. அதன்பின்னர் தேர்தல் நாளன்று பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

இதில், ஆங் சான் சூகியின ஜனநாயக தேசிய லீக் கட்சி (என்எல்டி) அதிக இடங்களில் தொடர்ந்து முன்னிலையில் உள்ளது.

எதிர்க்கட்சிகள் மிகவும் பலவீனமாக இருப்பதால் ஆங் சான் சூகியின் கட்சியே அதிக இடங்களை பிடிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாடாளுமன்றத்தின் இரு அவைகள், அங்குள்ள 7 மாநில சட்டப்பேரவைகள் மற்றும் 7 மண்டலங்கள் என மொத்தம் 1,171 இடங்களுக்கு தேர்தல் நடந்தது.

பகிரவும்...