Main Menu

மலையகத்திலும் காணி அபகரிப்பு முயற்சி – இராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு

வடக்கு, கிழக்கில் காணிகள் அபகரிக்கப்பட்டது போல, மலையகப் பகுதிகளில் உள்ள காணிகளையும் கையகப்படுத்தும் முயற்சி முன்னெடுக்கப்பட்டு வருவதாக மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.நுவரெலியாவில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

வடக்கு கிழக்கின் பல பகுதிகளில் காணிசுவீகரிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்றுவருகின்றன.

பசறை, கோணகலை பகுதியில் அரசாங்கத்தின் ஆதரவுடன் தோட்டக்காணிகளை அபகரிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

எமது கட்சியின் பதுளை பிரதேச சபை உறுப்பினர் சிவநேசன் மீது, நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தாக்குதல் நடத்தியுள்ளார். இச்சம்பவத்தை நாம் கண்டிக்கின்றோம்.

தோட்டப்பகுதியில் உள்ள காணியை பாதுகாக்க முற்பட்டதால் தான் அவர்மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

வடக்கு, கிழக்கில் காணிகள் அபகரிக்கப்பட்டதுபோல, மலையக பகுதிகளில் உள்ள காணிகளையும் கையகப்படுத்தும் முயற்சி எடுக்கப்படுகின்றது. இதனை தடுத்து நிறுத்த நாம் ஒன்றுபட வேண்டும்.

இரத்தினபுரி, நெலுவ உள்ளிட்ட பல பகுதிகளிலும் இவ்வாறான காணி சுவீகரிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இத்தகைய செயற்பாடுகளை தடுத்து நிறுத்துவதற்கு அரசாங்கத்தின் பங்காளிகளாகவுள்ள மலையக மக்கள் பிரதிநிதிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

பகிரவும்...