Main Menu

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் – சிறிதளவும் சகித்துக் கொள்ள மாட்டோம் – இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்

தேர்தல்களை  பிற்போடுவதை சிறிதளவும் சகித்துக்கொள்ளப்போவதில்லை என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற ஜனாதிபதி தேர்தல்களை பிற்போடுவதற்கான முயற்சிகள் இடம்பெற்றால் அதனை சிறிதளவும் சகித்துக்கொள்ளப்போவதில்லை அதனை எதிர்க்கவும் தயங்கப்போவதில்லை  என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

தேர்தல்களை பிற்போடுவது சர்வஜனவாக்குரிமை குறித்த மக்களின் நம்பிக்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனகுறிப்பிட்டுள்ள இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் கௌசல்ய நவரட்ண மக்களின் வாக்குரிமைக்கு சவால் விடுக்கின்ற விடயமாகவும் இது மாறும் என தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் நாடாளுமன்ற தேர்தல்களில் எது முதலில் இடம்பெறவேண்டும் என தெரிவிக்கும் அரசமைப்பு ஏற்பாடுகள் எதுவும் இல்லை என குறிப்பிட்டுள்ள அவர் அரசமைப்பில் குறிப்பிடப்பட்டுள்;ள காலத்திற்குள் இந்த தேர்தல்கள் இடம்பெறவேண்டும் என்றே சட்டம் தெரிவிக்கின்றது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதிக்கு பதில் தற்போதைய ஜனாதிபதி ஆட்சிபுரிகின்றார் என்றாலும் தற்போதைய ஜனாதிபதியின் பதவி காலம் இந்த நவம்பருடன் முடிவிற்கு வருகின்றது என தெரிவித்துள்ள கௌசல்ய நவரட்ண நவம்பருக்கு முன்னர் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவேண்டும் எனவும்குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தின் ஆயுள்காலம் முடிவடைந்ததும் நாடாளுமன்ற தேர்தலை நடத்தவேண்டும் நாடாளுமன்றத்தை அதற்கு முன்னர் கலைக்க முடியுமென்றால் ஜனாதிபதி தேர்தலிற்கு முன்னர் நாடாளுமன்ற தேர்தலை நடத்தலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட காலத்திற்குள் தேர்தலைநடத்தவேண்டியது நாடாளுமன்றத்தினதும் தேர்தல் ஆணையகத்தினதும்கடமை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தலை பிற்போடுவதற்கான ஏற்பாடுகள் எதுவும் அரசமைப்பில் இல்லை இதற்கு அரசமைப்பு  ஏற்பாடுகள் அவசியம் அரசமைப்பில் மாற்றங்களை மேற்கொள்வதன் மூலம் அல்லது நாடாளுமன்றத்தின் மூன்றில்இரண்டு ஆதரவு மற்றும்சர்வஜனவாக்கெடுப்பின் மூலம் மாத்திரமே அதனை செய்ய முடியும் எனவும் குறிப்பிட்டுள்ள இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சர்வஜனவாக்கெடுப்பைநடத்த முடியுமென்றால் நிச்சயமாக உங்களால் தேர்தலை நடத்தமுடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும்...