Main Menu

மதுரையில் நாளை கருணாநிதி சிலையை மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்

மதுரை சிம்மக்கல்லில் நாளை நடைபெறும் விழாவில் பங்கேற்று கருணாநிதி சிலையை மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

திறப்பு விழாவுக்கு தயாராக உள்ள கருணாநிதி சிலை.மதுரை:

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு மதுரையில் சிலை வைக்க தி.மு.க. திட்டமிட்டது.

அதன்படி மதுரை சிம்மக்கல்லில் மாவட்ட மைய நூலகம் எதிரே சிலை அமைக்க அரசு அனுமதி அளித்தது. இதனை தொடர்ந்து அங்கு சிலை அமைக்கும் பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகின்றன.

8.5 அடி உயரத்தில் முழுஉருவ வெண்கல சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான பீடம் 12 அடியில் கட்டப்பட்டுள்ளது.

பீடத்தில் சிலை வைக்கப்பட்டு திறப்பு விழாவிற்கு தயார் நிலையில் உள்ளது.

தமிழகத்திலேயே முதல் முறையாக பொது இடத்தில் கருணாநிதி சிலை அமைக்கப்படுவது இது தான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் திறப்பு விழா நாளை (17-ந்தேதி) நடக்கிறது. இதற்காக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை காலை மதுரை வருகிறார்.

“உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” நிகழ்ச்சியின் 4-ம் கட்ட பயணத்தை மதுரை ஒத்தக்கடையில் மதியம் 1 மணிக்கு தொடங்குகிறார்.

அதன் பிறகு மதியம் 3 மணிக்கு சிம்மக்கல்லில் நடைபெறும் விழாவில் பங்கேற்று கருணாநிதி சிலையை திறந்து வைக்கிறார்.

விழாவிற்கான ஏற்பாடுகளை மதுரை மாநகர் மற்றும் மாவட்ட தி.மு.க.வினர் செய்து வருகின்றனர்.

பகிரவும்...