Day: February 16, 2021
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் : ரபெல் நடால், ஆஷ்லி பார்ட்டி கால்இறுதிக்கு முன்னேற்றம்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ரபெல் நடால், ஆஷ்லி பார்ட்டி ஆகியோர் கால்இறுதிக்கு முன்னேறினார்கள். கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் நடந்து வருகிறது. இதில் 8-வது நாளான நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு 4-வதுமேலும் படிக்க...
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு 10.96 கோடியை தாண்டியது
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 10.96 கோடியைக் கடந்துள்ளது. சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ 12 மாதங்கள் கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை.மேலும் படிக்க...
எகிப்தில் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மது ஆலை கண்டுபிடிப்பு
எகிப்தில் ஆய்வு பணியின்போது அபிடோஸ் நகரில் 5,000 ஆண்டுகளுக்கு முன்னா் இயங்கி வந்த மது ஆலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எகிப்து நாட்டின் பழமை வாய்ந்த நகரங்களில் ஒன்று அபிடோஸ். இங்கு மிகப் பெரிய கல்லறைகள் மற்றும் கோவில்கள் உள்ளன. இந்த நகரில் எகிப்துமேலும் படிக்க...
அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் பெயரை வர்த்தகத்துக்கு பயன்படுத்தக் கூடாது- வெள்ளை மாளிகை எச்சரிக்கை
அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிசின் பெயரை அவரது உறவினர் ஒருவர் தனது வர்த்தக நிறுவனத்துக்கு பயன்படுத்தினார். இதற்கு வெள்ளை மாளிகை எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியை சேர்ந்த கமலா ஹாரிஸ். வெற்றி பெற்றார். இவர்மேலும் படிக்க...
சட்டமன்ற தேர்தலில் எவ்வளவு பணம் கொடுத்தாலும் அ.தி.மு.க. வெற்றி பெற முடியாது- வைகோ பேச்சு
அ.தி.மு.க. அரசு சட்டமன்ற தேர்தலில் பணத்தை கொடுத்து வெற்றி பெற முயற்சி செய்து வருகிறது. அவர்கள் எவ்வளவு பணம் கொடுத்தாலும் வெற்றி பெற முடியாது என்று வைகோ கூறியுள்ளார். ம.தி.மு.க. சார்பில் சேலம் மண்டலத்திற்கு உட்பட்ட சேலம் மேற்கு, சேலம் மத்திய,மேலும் படிக்க...
மதுரையில் நாளை கருணாநிதி சிலையை மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்
மதுரை சிம்மக்கல்லில் நாளை நடைபெறும் விழாவில் பங்கேற்று கருணாநிதி சிலையை மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். திறப்பு விழாவுக்கு தயாராக உள்ள கருணாநிதி சிலை.மதுரை: மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு மதுரையில் சிலை வைக்க தி.மு.க. திட்டமிட்டது. அதன்படி மதுரை சிம்மக்கல்லில் மாவட்டமேலும் படிக்க...
அஜித் ரசிகர்களுக்கு வௌியிட்டுள்ள அறிக்கை
வலிமை அப்டேட் விவகாரத்தில் ரசிகர்கள் கண்ணியம் காக்க வேண்டும் என்று ரசிகர்களுக்கு நடிகர் அஜித் அறிக்கை விடுத்துள்ளார். நேர் கொண்ட பார்வை படத்துக்குப் பிறகு அஜித் – இயக்குநர் ஹெச். வினோத் கூட்டணி மீண்டும் தொடர்கிறது. இருவரும் இணைந்துள்ள படத்துக்கு வலிமைமேலும் படிக்க...
புதிய வகை கொரோனா தொற்றினால் நாட்டிற்கு ஆபத்து இல்லை
பிரித்தானியாவின் புதிய வகை கொரோனா வைரஸ் நாட்டில் இனங்காணப்பட்டுள்ள போதிலும் அது நாட்டிற்கு ஆபத்தில்லை என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார். தற்போதுள்ள நிலைமை குறித்து அவதானத்துடன் செயற்பட்டு வருவதாகவும், நாட்டை முடக்கும் தேவை இல்லை என்றும் அவர் கூறினார்.மேலும் படிக்க...
சஜித் மற்றும் ரணில் இடையில் விஷேட சந்திப்பு
எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது அரசியல் ரீதியான கலந்துரையாடல்கள் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும்மேலும் படிக்க...
வதந்திகளுக்கு அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ நிலைபாட்டை கூறமுடியாது
வதந்திகளுக்கு அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ நிலைபாட்டை கூறமுடியாது முடியாது என்று அமைச்சரவை இணைப்பேச்சாளரும், எரிபொருள் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார். இலங்கையில் பாரதிய ஜனதா கட்சியை அமைப்பதற்கு திட்டமிடப்பட்டிருப்பதாக கூறப்படும் கூற்று தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்வி ஒன்றுக்கு அமைச்சர் பதிலளிக்கையிலேயேமேலும் படிக்க...