Main Menu

பிரேஸில் ஜனாதிபதியின் செய்தித் தொடர்பாளருக்கு கொரோனா வைரஸ்!

பிரேஸில் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோவின் செய்தித் தொடர்பாளர், ஒட்டாவியோ ரெகோ பரோஸ்க்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

59 வயதான முன்னாள் இராணுவ ஜெனரலான ஒட்டாவியோ ரெகோ பரோஸ், நேற்று முன் தினம் (செவ்வாய்க்கிழமை) கொரோனா வைரஸுக்கு சாதகமாக சோதனை செய்துள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஒட்டாவியோ ரெகோ பரோஸ்க்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்ட பின்னர், அவர் ‘பரிந்துரைக்கப்பட்ட அனைத்து நெறிமுறைகளையும் பின்பற்றுகிறார்’ என ஜனாதிபதி அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

தகவல் தொடர்புத் தலைவர் ஃபேபியோ வாஜ் கார்டன் மற்றும் தேசிய பாதுகாப்பு அமைச்சர் அகஸ்டோ ஹெலெனோ உள்ளிட்ட 20 இற்க்கும் மேற்பட்ட உயர்மட்ட அதிகாரிகள் கொரோனா வைரஸுக்கு சாதகமாக சோதனை செய்துள்ளனர்.

எனினும், பிரேஸில் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோ கொரோனா வைரஸுக்கு எதிர்மறையான சோதனையை செய்தாக கூறுகிறார்.

இதனிடையே, அதிக அளவில் தொற்றுநோய்கள் மற்றும் இறப்புகளுக்கு மத்தியில் வைரஸைக் கட்டுப்படுத்த ஊடரங்கு தேவைப்படலாம் என்று பிரேஸிலின் சுகாதார அமைச்சர் முதன்முறையாக கூறியுள்ளார்.

பகிரவும்...