Main Menu

அமெரிக்காவில் வேண்டுமென்றே பரப்பப்படும் கொரோனா வைரஸ்: மக்கள் கவலை!

வடமேற்கு அமெரிக்க மாநிலமான வொஷிங்டனில் உள்ள ஒரு தரப்பினர் கொரோனா வைரஸை, வேண்டுமென்றே பரப்புவதாக மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இதற்காக, ‘கோவிட் -19 கட்சிகள்’ என்ற குழு செயற்பட்டுவருவதாக, மாநில சுகாதார செயலாளர் ஜோன் வைஸ்மேன் எச்சரித்துள்ளார்.

சியாட்டிலிலிருந்து தென்கிழக்கில் 420 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள வல்லா வல்லா கவுண்டியில் உள்ள அதிகாரிகள், இப்பகுதியில் கிட்டத்தட்ட 100 தொற்றுகளில் சில ‘கோவிட் -19 கட்சிகள்’ என்று அழைக்கப்படுபவர்கள் வேண்டுமென்றே ரைவஸ்சை பரப்பியதாக தெரிவித்ததை அடுத்து வைஸ்மனின் கருத்துக்கள் வெளிவந்துள்ளன

இதுகுறித்து மாநில சுகாதார செயலாளர் ஜோன் வைஸ்மேன் கூறுகையில், ‘இந்த தொற்றுநோய்க்கு மத்தியில் குழுக்களாகச் செல்வது நம்பமுடியாத அளவிற்கு ஆபத்தானது. மக்களை மருத்துவமனையில் சேர்ப்பதற்கும், இறப்பதற்கும் கூட அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது.
கொவிட்-19 தொற்றிலிருந்து மீண்டு வருபவர்களுக்கு நீண்டகால பாதுகாப்பு இருக்கிறதா என்பது தெரியவில்லை.

நோய்த்தொற்றுக்குப் பிறகு ஏற்படக்கூடிய நீண்டகால சுகாதார பிரச்சினைகள் உட்பட இந்த வைரஸைப் பற்றி எங்களுக்குத் தெரியாதவை இன்னும் உள்ளன’ என கூறினார்.

பகிரவும்...