Main Menu

ஒரேநாளில் 3500இற்கும் அதிகமானோருக்கு தொற்று- இந்தியாவில் 50 ஆயிரத்தைக் கடந்தது பாதிப்பு!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தைக் கடந்துள்ளதுடன் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 800ஐ எட்டியுள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்று (வியாழக்கிழமை) வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தியாவில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 52 ஆயிரத்து 952 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3 ஆயிரத்து 561 பேருக்கு நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அத்துடன் நேற்று மட்டும் 89 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதன்மூலம், கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஆயிரத்து 783 ஆக உயர்ந்துள்ளது. தொற்று உறுதிசெய்யப்பட்ட 53 ஆயிரம் பேரில் 15 ஆயிரத்து 266 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்.

கொரோனா தொற்று பாதிப்பில் மகாராஷ்டிரா மாநிலம் தொடர்ந்து உச்சத்தில் உள்ளது. மகாராஷ்டிராவில் மொத்தம் 16 ஆயிரத்து 758 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் அங்கு 651 மரணித்துள்ளனர்.

குஜராத்தில் 6 ஆயிரத்து 625 பேருக்கும், டெல்லியில் 5 ஆயிரத்து 532 பேருக்கும், தமிழகத்தில் 4 ஆயிரத்து 829 பேருக்கும், மத்திய பிரதேசத்தில் 3 ஆயிரத்து 138 பேருக்கும், ராஜஸ்தானில் 3 ஆயிரத்து 317 பேருக்கும், உத்தரப் பிரதேசத்தில் 2 ஆயிரத்து 998 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு, நோய் அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்தல் உள்ளிட்ட பல்வேறு நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெறுகின்றன.

மேலும், கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள பகுதிகளில் தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது. எனினும் பரிசோதனைகள் அதிகரிக்ககும்போது புதிய நோயாளிகளின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...