Main Menu

பிரான்ஸ் – ஆசிரியருக்கு கொவிட் 19 தொற்று! – collège மூடல்

Blanc-Mesnil (Seine-Saint-Denis) நகரில் உள்ள collège Marcel Cachin கல்லூரி மூடப்பட்டுள்ளது. பிராந்திய சுகாதார நிறுவனம் தெரிவிக்கும் போது, இங்கு கல்வி கற்பிக்கும் ஆசிரியர் ஒருவருக்கு கொவிட் 19 வைரஸ் தொற்று உறுதி செய்ததை அடுத்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.  அவரிடம் தொடர்பில் இருந்த மாணவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட உள்ளதாக அறிய முடிகிறது. இவ்வாரத்தில் இரு மழலையர் பள்ளி கொவிட் 19 வைரஸ் காரணமாக மூடப்பட்டிருந்தது. தவிர இல் து பிரான்சுக்குள் மேலும் சில கல்லூரிகள் வரும் வாரத்தில் மூடப்படலாம் எனவும் அறிய முடிகிறது.

பகிரவும்...