Main Menu

பிரான்ஸின் சில மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை!

கடும் வெப்பம் காரணமாக பிரான்ஸின் 21 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸின் வானியல் மையத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக 36°C இல் முதல் 40°C வரை வெப்பம் நிலவும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

Ardèche (07), Ariège (09), Aveyron (12), Charente (16), Charente-Maritime (17), Corrèze (19), Dordogne (24), Drôme (26), Haute-Garonne (31), Gers (32), Gironde (33), Isère (38), Landes (40), Lot (46), Lot-et-Garonne (47), Pyrénées-Atlantiques (64), Hautes-Pyrénées (65), Rhône (69), Tarn (81), Tarn-et-Garonne (82), Haute- Vienna (87) ஆகிய 21 மாவட்டங்களுக்கே இவ்வாறு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், எதிர்வரும் சில தினங்களில் பிரான்ஸின் பல்வேறு பகுதிகளிலும் அனல் காற்று வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...