Day: July 22, 2019
பிரான்ஸின் சில மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை!
கடும் வெப்பம் காரணமாக பிரான்ஸின் 21 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரான்ஸின் வானியல் மையத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 36°C இல் முதல் 40°C வரை வெப்பம் நிலவும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது. Ardècheமேலும் படிக்க...
மானிப்பாய் இளைஞன் சுட்டுக்கொலை ; வாள்வெட்டுக் கும்பலைச் சேர்ந்த மூவர் கைது
மானிப்பாயில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட இளைஞனுடன் தாக்குதல் நடத்த வந்தனர் என்ற குற்றச்சாட்டில் மூன்று பேர் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவித்தன. அத்துடன், மானிப்பாய் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் இளைஞன் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்கும்மேலும் படிக்க...
டிசம்பர் ஏழாம் திகதி ஜனாதிபதி தேர்தல் – மஹிந்த தேசப்பிரிய
டிசம்பர் ஏழாம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடக்கும் எனத் தெரிவித்த தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, நீதிமன்றம் சென்று தேர்தலை பிற்படுத்த ஜனாதிபதி முயற்சிக்க மாட்டார் என்றும் குறிப்பிட்டார். மேலும் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் பதிலாள் வேட்பாளர்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழுமேலும் படிக்க...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ; அரசாங்கத்திற்கு எதிராக முன் வைக்கப்படும் குற்றச் சாட்டுக்களை நிராகரிக்கின்றேன்
ஏப்ரல் 21 தாக்குதல் இடம்பெற்று மூன்று மாதங்கள் நிறைவடையும் சந்தர்ப்பத்தில் அரசாங்கத்திற்கு எதிராக முன்வைக்கப்படும் சகல குற்றச்சாட்டுக்களையும் தான் நிராகரிப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார். ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னரான காலத்தில் அரசாங்கம் தனது அனைத்து கடமைகளையும் நிறைவேற்றியுள்ளதுடன், அத்தாக்குதலுடன் தொடர்புடைய பயங்கரவாதமேலும் படிக்க...
ஈரானில் உளவு பார்த்த சிஐஏ கூலிப்படையினர் 17 பேர் கைது: சிலருக்கு மரணதண்டனை விதிப்பு
ஈரான் நாட்டில் செயல்பட்டுவந்த அமெரிக்காவின் சிஐஏ உளவு அமைப்பை சேர்ந்த கூலிப்படையினர் 17 பேர் கைது செய்யப்பட்டு அவர்களில் சிலருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவுடன் செய்து கொண்ட அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தம் கைவிடப்பட்டதையடுத்து ஈரான் அணு ஆயுதமேலும் படிக்க...
இங்கிலாந்தின் புதிய பிரதமர் யார்?
இங்கிலாந்தின் புதிய பிரதமர் யார் என்பது குறித்து முன்னாள் வெளியுறவு மந்திரி போரிஸ் ஜான்சனுக்கும், தற்போதைய வெளியுறவு மந்திரி ஜெராமி ஹண்டுக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவதற்கான ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தத்துக்கு எம்.பி.க்களின் ஆதரவை பெறமேலும் படிக்க...
ஜெயலலிதாவின் சொத்து மதிப்பு எவ்வளவு? அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு
ஜெயலலிதாவின் சொத்து மதிப்பு என்ன? என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வருமான வரித்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 5-ந் தேதி மரணம் அடைந்தார். அவர் தனது வாழ்நாளில் பெரும்மேலும் படிக்க...
சந்திரயான்2 பூமியின் சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தம் – ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து
இந்தியாவால் இன்று ஏவப்பட்ட சந்திரயான்-2 விண்கலத்தை வெற்றிகரமாக பூமியின் சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்திய ‘இஸ்ரோ’ விஞ்ஞானிகளுக்கு ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர். இந்திய விண்வெளி ஆராய்ச்சி பணிகளில் ஒருகட்டமாக சந்திரனின் தென் துருவத்தில் இறங்கி ஆய்வு மேற்கொள்ள ‘சந்திரயான்-2’ விண்கலம்மேலும் படிக்க...
இத்தாலியில் திருடப்பட்ட ஓவியம் 75 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் ஒப்படைப்பு!
இத்தாலியில் திருடப்பட்ட ஓவியம் ஒன்று 75 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் கையளிக்கப்பட்டுள்ளது. ஜேர்மனிய அரசாங்கம் குறித்த ஓவியத்தினை மீண்டும் கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ‘Flower Vase’ என்பது ஓவியத்தின் பெயர். ஜோன் வான் ஹ்யூசெம் எனும் ஓவியரின் மிகச் சிறந்த ஓவியமாக அதுமேலும் படிக்க...
நடிகர் சூர்யாவுக்கு வைகோ பாராட்டு!
புதிய கல்விக்கொள்கை குறித்து கருத்து தெரிவித்த நடிகர் சூர்யாவுக்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “இந்தியாவின் பன்முகத்தன்மையை சிதைத்து, சமூக நீதிக்கு கொள்ளி வைத்து,மேலும் படிக்க...
30 வருட கால யுத்தம் நிறைவு – சர்வதேச விருதை பெற்றார் மஹிந்த
எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்சவுக்கு “World Icon Award” என்ற சர்வதேச விருது வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் இந்தியாவினால் வல்லுநர்களுக்காக “World Icon Award” விருது வழங்கப்படுகின்றது. அந்தவகையில் இம்முறை இலங்கையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது தெரிவு செய்யப்பட்ட 10மேலும் படிக்க...
கேரளாவில் கனமழைக்கு 8 பேர் பலி – 3 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
கேரளாவில் கனமழை காரணமாக கோழிக்கோடு, கண்ணூர், கோட்டயம் ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள பள்ளி-கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டு உள்ளது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது. இதனால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கடந்த 3மேலும் படிக்க...
ஆந்திராவில் 4 லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலை – ஜெகன்மோகன் ரெட்டி
ஆந்திராவில் 4.01 லட்சம் இளைஞர்களுக்கு காந்தி ஜெயந்தி தினமான அக்டோபர் 2 முதல் அரசு வேலை வழங்கப்படும் என ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். ஆந்திர மாநில முதல்- மந்திரியாக ஜெகன்மோகன் ரெட்டி பதவி ஏற்ற பிறகு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்துமேலும் படிக்க...
50 ஆண்டுகளாக கடலில் மிதந்த கடிதம்.. தாங்கி வந்த செய்தி -சுவாரஸ்ய நிகழ்வு
ஆஸ்திரேலியாவில் 50 ஆண்டுகளாக கடலில் பாட்டிலுக்குள் மிதந்த கடிதம் ஒன்று சிறுவனின் கைக்கு வந்து சேர்ந்தது. இது குறித்த சுவாரஸ்ய தகவலைப் பார்ப்போம். தெற்கு ஆஸ்திரேலியாவின் ஐரே தீபகற்பத்தில் உள்ள டாலியா கடற்கரையில் ஜியா மற்றும் அவரது மகனான எலியட்(9) ஆகியோர்மேலும் படிக்க...
‘பேஸ் ஆப்’ செயலியால் 3 வயதில் மாயமானவர் 18 ஆண்டுகளுக்கு பின் குடும்பத்துடன் இணைந்தார்
சீனாவில் 3 வயது குழந்தையாக இருந்தபோது காணாமல்போன நபர் ஒருவர் ‘பேஸ் ஆப்’ செயலியால் 18 ஆண்டுகளுக்கு பின்னர் தனது குடும்பத்துடன் இணைந்த நெகிழ்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது. சமகால புகைப்படங்களை வயதான தோற்றத்திலும், இளமையான தோற்றத்திலும் உடனுக்குடன் மாற்றிக்காட்டும் ‘பேஸ்மேலும் படிக்க...
நைஜீரியா விமான நிலையத்தில் புறப்பட தயாராக இருந்த விமானத்தின் இறக்கையில் ஏறிய வாலிபர்
நைஜீரியா விமான நிலையத்தில் புறப்பட தயாராக இருந்த விமானத்தின் இறக்கையில் ஏறிய வாலிபரால் பயணிகள் மத்தியில் பதற்றத்தையும், பீதியையும் ஏற்படுத்தியது. நைஜீரியாவின் லாகோஸ் நகரில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அஸ்மான் விமான நிறுவனத்துக்கு சொந்தமான பயணிகள் விமானம் ஒன்றுமேலும் படிக்க...
கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்கி பின்னடைவுகளை நிவர்த்தி செய்வோம்
அரசியல் பொருளாதாரம் சமூக ரீதியாக பின் அடைந்துள்ள இந்த நாட்டை கட்டி எழுப்புவதற்காக எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 11 ஆம் திகதி முதல் கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக்கி அதன் மூலம் ஜனாதிபதியாக தெரிவு செய்த அந்த பின்னடைவுகளை நிவர்த்தி செய்வதற்குமேலும் படிக்க...
இலங்கை புத்திஜீவிகள் நிறைந்த நாடாக இருந்தாலும் பெற்றுக்கொள்ளும் பயன்கள் தொடர்பில் திருப்தி இல்லை
விஞ்ஞான, தொழிநுட்ப மற்றும் ஆராய்ச்சி ஆகிய துறைகளினூடாக மனித இனத்திற்கு தீங்கு விளைவிக்கும் கண்பிடிப்புக்களை தவிர்த்து, மனித இனத்திற்கு நன்மை பயக்கும் கண்டுபிடிப்புகளுக்கு முக்கியத்துவமளிக்க வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்தார். நேற்று (21) பிற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டுமேலும் படிக்க...
முஸ்லிம்களின் கடைகளுக்கு முன்பாக தொங்கவிட்டப்பட்ட பன்றிகளின் தலைகள்
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதலில் சேதமடைந்த நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டி புனித செபஸ்தியார் தேவாலயம் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை திறக்கப்படவிருந்த நிலையில், கட்டுவாப்பிட்டி தேவாலயத்திற்கு அண்மித்ததாக உள்ள மீரிகமை பிரதான வீதியில் முஸ்லிம்களுக்கு சொந்தமான சில கடைகளுக்கு முன்பாகமேலும் படிக்க...