Main Menu

பிரபல தொழில் அதிபர்களின் சொத்துக்கள் பொதுத் துறை வங்கிகளுக்கு மாற்றப் பட்டதாக அறிவிப்பு!

பிரபல தொழிலதிபர்களான விஜய் மல்லையா, நிரவ்மோடி, மெகுல் சோக்சி ஆகியோரிடம் இருந்து முடக்கப்பட்ட 9 ஆயிரத்து 41 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை பொதுத்துறை வங்கிகளுக்கு மாற்றியுள்ளதாக அமுலாக்கப்பிரிவு அறிவித்துள்ளது.

இது குறித்து அமுலாக்கத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், மேற்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில், 18 ஆயிரத்து 170 கோடியே 2 இலட்சம் மதிப்பிலான சொத்துக்களை முடக்கியதில் 329 கோடியே 67 இலட்சம் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

9,041.5 கோடி மதிப்பிலான சொத்துக்கள் பொதுத்துறை வழங்கிகளுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளன. விஜய்மல்லையா வழக்கில் 25 ஆம் திகதிக்குள் பங்கு விற்பனை மூலம் 800 கோடியை மீட்க முடியும்.

பொதுத்துறை வங்கிகள் ஏற்கனவே பங்குகள் விற்பனை மூலம் ஆயிரத்து 357 கோடியை மீட்டுள்ளன’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிரவும்...