Main Menu

பயணக் கட்டுப் பாடுகளை எளிதாக்குகிறது இத்தாலி!

கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுநோய் காரணமாக விதிக்கப்பட்ட பயணக் கட்டுப்பாடுகளை, இத்தாலிய அரசாங்கம் எளிதாக்கவுள்ளது.

இதன்படி, எதிர்வரும் ஜூன் 3ஆம் திகதி முதல் பிராந்தியங்களுக்கிடையில் சுதந்திரமாக செல்ல இத்தாலியர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். அத்துடன் சர்வதேச பயணமும் அனுமதிக்கப்படுகின்றது.

இரண்டு மாதங்களுக்கும் மேலாக இத்தாலி முடக்கப்பட்ட பின்னர் அதன் பொருளாதாரத்தை மீண்டும் திறப்பதற்கான நாட்டின் முயற்சிகளில் இந்த நடவடிக்கை ஒரு முக்கிய படியாகும்.

இந்த மாத தொடக்கத்தில் தொழிற்சாலைகள் மற்றும் பூங்காக்கள் மீண்டும் திறக்க அனுமதிக்கப்பட்டபோது, இத்தாலியில் நடைமுறையில் இருந்த முடக்க நிலை கட்டுப்பாடுகள் முதல் கட்டமாக தளர்த்தப்பட்டது.

தற்போது, புதிய ஆணையில் பிரதமர் கியூசெப் கோன்டே கையெழுத்திட்டு இன்று (சனிக்கிழமை) அதிகாலை வெளியிட்டார்.

அடுத்த வாரம் சில கட்டுப்பாடுகளுடன் தேவாலயங்களில் பிரார்த்தனைகளில் கலந்துகொள்ள மக்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றாலும் பாடசாலைகள் மூடப்படும். கூட்டத்திற்கு அனுமதி இல்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது. மேலும், சமூக தொலைதூர விதிகள் தொடர்ந்து பின்பற்றப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

பகிரவும்...