Main Menu

பிரான்ஸில் வரலாறு காணாத அளவு வீதி விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

பிரான்ஸில் வரலாறு காணாத அளவு வீதி விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கையில், வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தோடு ஒப்பிடுகையில், 2020ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 55.8 சதவீதத்தால் வீழ்ச்சி கண்டுள்ளது.

2020ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 103பேர் வீதி விபத்தில் உயிரிழந்துள்ளனர். 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இந்த எண்ணிக்கை 236ஆக இருந்தது.

இதேவேளை, கடந்த 2019ஆம் ஆண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில், கடந்த மார்ச் மாதத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 38.6 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது.

இந்த வீழ்ச்சி ஒரு வரலாறு காணாத பதிவாகும். கொரோனா வைரஸ் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக நடைமுறைப்படுத்தப்பட்ட முடக்கநிலையால் விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிரவும்...