Main Menu

ஸ்பெயினிலிருந்து வருபவர்கள் தனிமைப் படுத்தப்படுவார்கள்: பிரான்ஸ்

ஸ்பெயினின் எல்லைக் கட்டுப்பாட்டுக்கு பதிலளிக்கும் வகையில், பிரான்ஸ் புதிய அறிவிப்பொன்றினை வெளியிட்டுள்ளது.

ஸ்பெயின் தனது எல்லைகளிற்கு வெளியே இருந்து வருபவர்களைத் 10 நாட்கள் தனிமைப்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், ஸ்பெயினிலிருந்து பிரான்ஸிற்குள் வருபவர்களும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட உள்ளதாகத் பிரான்ஸ் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து எலிசே மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்த முடிவுகள் எங்களிற்கு விருப்பமில்லாவிட்டாலும், அவர்களின் நடவடிக்கைக்கு எதிர் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டி உள்ளது. இருப்பினும் இன்னமும் இரண்டு நாடுகளிற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் நடைபெறுகின்றது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஜேர்மனியுடனான எல்லையை எதிர்வரும் ஜூன் 15ஆம் திகதி திறக்கவுள்ளதாக பிரான்ஸ் தெரிவித்துள்ளது.

இதேபோல, ஜேர்மனி, ஆஸ்திரியா, பிரான்ஸ் உள்ளிட்ட அனைத்து எல்லைகளையும் சுவிஸ்லாந்து ஜூன் 15ஆம் திகதி திறக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.

பகிரவும்...