Main Menu

பயங்கரவாதத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப் போவதில்லை – ஆப்கானிஸ்தான்

ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப் போவதில்லை என நேட்டோ நாடுகளின் தற்காப்புத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையை மேற்கொள்வதற்கான சாத்தியத்தை முற்றிலும் நிராகரிக்க இயலாது என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறியதைத் தொடர்ந்து அங்கு பயங்கரவாத அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளன.

இதனை அடுத்து ஆப்கானிஸ்தானிலிருந்து அதிகமானோர் அந்த வட்டாரத்தில் உள்ள மற்ற பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து செல்வது குறித்துக் கவலை எழுந்துள்ளது.

இந்நிலையில் இந்த சம்பவம் வட்டார அளவில் நெருக்கடியை ஏற்படுத்தலாம் என அஞ்சப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...