Main Menu

கடந்த 600 நாட்களாக ஜி ஜின்பிங் சீனாவுக்கு வெளியே செல்லவில்லை!

சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், கடந்த 600 நாட்களாக தனது நாட்டை விட்டு வேறு எந்த நாட்டுக்கும் விஜயம் மேற்கொள்ளவில்லை.

இது மேற்கத்திய நாடுகளுடனான உறவை மேலும் பாதிக்கலாம் என நிபுணர்கள் நம்புவதாக ப்ளூம்பெர்க் செய்தி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ஜி ஜின்பிங் கடந்த வியாழக்கிழமை, பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்களின் உச்சிமாநாட்டில் கலந்து கொண்டார். மேலும் அவர், உலகத் தலைவர்களுடன் சுமார் 60 அழைப்புகளை ஏற்படுத்தியுள்ளார்.

அதாவது, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் மற்றும் பிரெஞ்சு தலைவர் இம்மானுவேல் மக்ரோனுடன் பல உரையாடல்கள் உட்பட அமெரிக்க ஜனாதிபதியுடன் கடந்த வெள்ளிக்கிழமை, தொலைபேசி ஊடாக கலந்துரையாடலில் ஈடுபட்டதாக ப்ளூம்பெர்க் செய்தி அறிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கொரோனா நிலைமை காரணமாக சமீபத்திய ஆண்டுகளில், சீனாவிற்கும் மேற்கத்திய நாடுகளுக்கு இடையிலான உறவு மோசமடைந்துள்ளது.

வெளிநாடுகளுக்குச் செல்ல ஜனாதிபதி ஜியின் தயக்கம், அந்த நாடுகளுடனும் மற்றவர்களுடனும் உறவுகளை மேம்படுத்துவதற்கு ஒரு தடையாக இருக்கலாம். ஏனெனில் இது பதட்டங்களைத் தணிக்க உதவும் முக்கிய நிகழ்வுகளின் பக்கங்களில் நேருக்கு நேர் சந்திப்புக்கான வாய்ப்பை நீக்குகிறது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன் அரசாங்க அதிகாரி மற்றும் மூத்த ஐரோப்பிய இராஜதந்திரியின் கூற்றுப்படி, “ஜி 20 கூட்டத்தில் பங்கேற்பது தொடர்பாக ஜி இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

மேலும் கொவிட்- 19 நெறிமுறைகளே, ஜனாதிபதி ஜி ஜின்பிங் நேரில் கலந்து கொள்ளாமல் இருப்பதற்கு காரணமாக இருக்கலாம்.

இந்நிலையில் ஜனாதிபதி ஜி ஜின்பிங் பங்கேற்க மாட்டார் என்ற கவலைகள் அதிகரித்துள்ளன. மேலும், உச்சிமாநாட்டின் வாய்ப்புகளை சேதப்படுத்தும் ஒரு முடிவு” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை ஜனாதிபதி ஜி, இறுதியாக  ஜனவரி 19 ஆம் திகதி 2020 மியன்மாருக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

குறித்த பயணத்தை தொடர்ந்தே கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக வுஹான் மூடப்பட்டது.

இதேவேளை, “கொவிட் ஆபத்தின் நிலைப்பாடு குறைவடைந்துள்ளமையினால் உயர்மடட்டத்தில் பயணிப்பது ஏற்புடையதல்ல என லோவி இன்ஸ்டிடியூட்டின் பொது கருத்து மற்றும் வெளிநாட்டு கொள்கை திட்டத்தின் பணிப்பாளர் நடாஷா கஸ்ஸம், ப்ளூம்பெர்க்கிடம் கூறியுள்ளார்.

மேலும், சில சீன பொதுமக்கள் சிறிய வெடிப்புகளுக்கு பதிலளிக்கும் வகையில் அவர்கள் எதிர்கொண்ட கடுமையான கட்டுப்பாடுகளைக் கருத்தில் கொண்டு, ஆடம்பரமான சர்வதேச பயணத்தையும் கேள்வி கேட்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும்...