Main Menu

பத்தாவது நாளாக தொடரும் வேலை நிறுத்தம்! – இன்றும் போக்குவரத்து தடை

இன்று சனிக்கிழமை பத்தாவது நாளாக வேலை நிறுத்தம் தொடர உள்ளது. ஆனால் போக்குவரத்து குறிப்பிட்ட சில மணிநேரங்களில் இயங்க உள்ளது.  RER A சேவைகள் 12:00 மணியில் இருந்து 18 மணி வரை இரண்டில் ஒன்று எனும் கணக்கில் இயங்கும்.  RER B சேவைகள் 12:00 இல் இருந்து 18:00 மணி வரை மூன்றில் ஒன்று எனும் கணக்கில் இயங்கும்.  மெற்றோக்களில் 1 ஆம் 14 ஆம் இலக்க மெற்றோக்களோடு Cityval மெற்றோவும் வழமை போல் இயங்கும். ஏனைய மெற்றோக்களில் 13:00 மணியில் இருந்து 18:00 மணி வரை மாத்திரமே இயங்கும். அதன் பின்னர் சேவை இரத்தாகும்.  இவற்றில் 2, 3bis, 5, 6, 7bis, 10, 11, 12, 13 ஆகிய இலக்க மெற்றோக்கள் முற்றாக தடைப்பட்டும். எட்டாம் இலக்க மெற்றோ மாத்திரம் காலை 9 மணியில் இருந்து மாலை 6 மணி வரை மூன்றில் இரண்டு எனும் கணக்கில் இயங்கும்.  ட்ராம் சேவைகளில், 1 ஆம், 3 ஆம், 6 ஆம் மற்றும் 8 ஆம் இலக்க ட்ராம்கள் தடையின்றி இயங்கும். மீதமானவை மீன்றில் ஒன்று அல்லது இரண்டு எனும் கணக்கில் இயங்கும்.  TGV சேவைகளில் நான்கில் ஒன்று சராசரியாக இயங்கும்.

பகிரவும்...