Main Menu

நாம் போட்டியாளர்கள் தான் எதிரிகள் அல்ல நாம் அனைவரும் அமெரிக்கர்கள்: ஜோ பிடன்!

நாம் போட்டியாளர்கள்தான் எதிரிகள் அல்ல நாம் அனைவரும் அமெரிக்கர்கள் என அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பிடன் தெரிவித்துள்ளார்.

டெலவேர் மாகாணத்தில் உள்ள வில்மிங்டனில் தனது ஆதரவாளர்கள் மத்தியில், நாட்டு மக்களுக்கு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்த நாடே நம்முடன் இருக்கும் சூழலில், தெளிவான பெரும்பான்மையுடன், நாம் இந்தப் போட்டியில் வெல்லப்போகிறோம் என்று தனது ஆதரவாளர்களிடம் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் 270 இடங்கள் பெறவேண்டும் என்ற நிலையில் ஜோ பிடன் 264 இடங்களைப் பெற்றுள்ளார். டொனால்ட் ட்ரம்ப் 214 இடங்களில் வெற்றிபெற்றுள்ளார்.

இந்நிலையில், பென்சில்வேனியா, ஜோர்ஜியா, நெவாடா, வட கரோலினா மற்றும் அலாஸ்கா ஆகிய ஐந்து மாநிலங்களில் இன்னும் வாக்கு எண்ணிக்கை முடிவடையாமல் நீடித்து வருகிறது.

எனினும், இதுவரை டொனால்ட் ட்ரம்புக்கு சாதகமாக இருந்த ஜோர்ஜியா மற்றும் பென்சில்வேனியாவில் ஜோ பிடன் தற்போது முன்னிலை பெற்றுள்ளார்.

இதனிடையே ஜோ பிடன் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘நாங்கள் எதிர் எதிர் கட்சியாக இருக்கலாம், ஆனால் எதிரிகள் கிடையாது, நாம் அமெரிக்கர்கள். நம்முடைய அரசியலின் நோக்கம் முற்றிலும் இடைவிடாத போர் கிடையாது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்’ என பதிவிட்டுள்ளார்.

பகிரவும்...