Main Menu

நவல்னியை கொலை செய்ய தேவைப் பட்டிருந்தால் அந்த வேலையை கட்சிதமாக முடித்திருப்போம்: புடின்

கிரெம்ளின் விமர்சகர் அலெக்ஸி நவல்னியை கொலை செய்ய தேவைப்பட்டிருந்தால், அந்த வேலையை கட்சிதமாக முடித்திருப்போம் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் தெரிவித்துள்ளார்.

பல்வேறு நாடுகளின் ஊடகங்கள் கலந்துக்கொண்ட வருடாந்திர ஊடக சந்திப்பில், எதிர்க்கட்சி தலைவர் நவல்னியை கொலை செய்யும் நோக்கத்தோடு விஷத்தன்மை உடைய வேதிப்பொருள் கொடுக்கப்பட்டது தொடர்பாக வினவிய போதே புடின் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘நவல்னி அமெரிக்க உளவு அமைப்புடன் தொடர்பில் உள்ளார். ரஷ்ய அதிகாரிகள் அவரை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். ஆனால், இதற்காகவெல்லாம் நாங்கள் அவருக்கு விஷம் கொடுக்க வேண்டியதில்லை. அவரால் யாருக்கு என்ன பயன்?

ஒருவேளை எங்களுக்கு அது தேவைப்பட்டிருந்தால் நாங்கள் அந்த வேலையை கட்சிதமாக முடித்திருப்போம்’ என கூறினார்.

அலெக்ஸி நவல்னி மீதான கொடிய விஷ தாக்குதலுக்கு புடின் தான் காரணம் என ஐரோப்பிய நாடுகள் குற்றஞ்சாட்டிய போதும் அதனை புடின் முற்றுமுழுதாக மறுத்துள்ளார்.

பகிரவும்...