Main Menu

இழப்புகளை மீட்டெடுக்க சுற்றுலாப் பயணிகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை தளர்த்தும் தாய்லாந்து!

கொரோனா வைரஸ் தொற்று பரவல் முடக்கநிலையால் ஏற்பட்ட சுற்றுலாத்துறை இழப்புகளை மீட்டெடுக்க சுற்றுலாப் பயணிகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை தாய்லாந்து அரசாங்கம் தளர்த்தியுள்ளது.

கொரோனா தொற்று காரணமாக உலக நாடுகள் பலவும் சுற்றுலாப் பயணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தன. இதன்காரணமாக சுற்றுலாத் துறையை நம்பிய பல்வேறு தொழில்கள் பாதிக்கப்பட்டன.

இந்நிலையில் தாய்லாந்து நாட்டு அரசாங்கம் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் விதமாக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளில் தளர்வுகளை அறிவித்துள்ளது.

புதிய தளர்வுகளின் மூலம் அவுஸ்ரேலியா, பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் விசாக்கள் இல்லாமல் தாய்லாந்திற்கு பயணிக்க முடியும்.

மேலும், 30 நாட்களுக்கு வழங்கப்பட்ட விசா 45 நாட்களாக நீடிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் சுற்றுலாப் பயணிகள் 2 வார காலத்திற்கு தனிமைப்படும் நடைமுறை மட்டும் தொடரும் எனவும் அரசாங்கம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

பகிரவும்...