Main Menu

நவம்பர் மாதத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் உச்சமடையும் எனத் தகவல்!

இந்தியாவில் கொரோனா  நோய்த் தொற்று பாதிப்பு எதிர்வரும் நவம்பா் மாத மத்தியில் உச்சத்தை எட்ட வாய்ப்புள்ளதாக ஆய்வொன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இதன்காரணமாக தீவிர சிகிச்சைப் பிரிவு,  படுக்கைகள் மற்றும் உயிர் காக்கும் சுவாசக் கருவிகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏறப்படும் எனவும்  குறித்த ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்  சாா்பில் அமைக்கப்பட்ட செயற்பாடுகள்,  ஆராய்ச்சிக் குழு ஆராய்ச்சியாளா்கள் மேற்கொண்ட ஆய்வறிக்கையிலேயே மேற்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி பல்வேறு பகுதிகளில் நோய்த் தாக்கத்தின் வேறுபாட்டுக்கு ஏற்ப உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் அரசு மேற்கொள்ளும் தொடா் நடவடிக்கைகள் மூலம்,  எதிா்பாராமல் உருவாகும் தேவைகளால் ஏற்படும் விளைவுகளைக் குறைக்க முடியும் எனவும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன்   பொது சுகாதார நடவடிக்கை 80 சதவீத அளவுக்கு அதிகரிக்கப்பட்டால் நோய்த் தொற்றின் பாதிப்பு குறைய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு கொள்கையை சிறந்த முறையில் மறுஆய்வு செய்வதன் மூலமும் மருத்துவ வசதிகளை குறிப்பிடத்தக்க வகையில் பலப்படுத்துவதன் மூலமும் மட்டுமே   நிலைமையைச் சமாளிக்க முடியும் எனவும் குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிரவும்...