Main Menu

திருமணத்துக்காக மதம் மாற்றம் செய்தால் 10 ஆண்டு வரை சிறை தண்டனை – உ.பி அரசு

திருமணத்துக்காக மதம் மாற்றம் செய்தால் 10 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கும் அவசர சட்டத்துக்கு  உத்தர பிரதேச அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள சில முக்கிய விடயங்கள் குறித்து அமைச்சர் சித்தார்த் நாத் சிங் தெரிவிக்கையில் மேற்படி குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து தெரிவித்த அவர், “ திருமணம் செய்வதற்காக  மதம் மாற்றப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. சில இடங்களில் காதலித்து  கட்டாயப்படுத்தி  மதமாற்றம் செய்யப்படுகிறது. இதனால்  சட்டம் – ஒழுங்கு பிரச்சினையும் ஏற்படுகிறது.

இதை தடுக்கும் வகையில்  திருமணத்துக்காக மதமாற்றம் செய்வதை குற்றமாக்கும் வகையில்  அவசர சட்டம் அமுல்படுத்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டத்தின்படி மதமாற்றம் செய்தால்  1 முதல் ஐந்து ஆண்டு சிறை  15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். இளம் சிறுமியர்  மற்றும் பழங்குடியின பெண்களை மதமாற்றம் செய்து திருமணம் செய்தால்  3 – 10 ஆண்டு சிறை  25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

ஒரு குழுவாக மதமாற்றம் செய்தால்  அதில் ஈடுபடும் அமைப்புக்கு  3 – 10 ஆண்டு சிறை மற்றும் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். அதே நேரத்தில் திருமணத்துக்குப் பிறகு மதம் மாறுவதற்கு அனுமதி அளிக்கப்படும். ஆனால்  மாவட்ட  ஆளுநரிடம் இரண்டு மாதங்களுக்கு முன்பே விண்ணப்பித்து  அனுமதி பெற வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

பகிரவும்...