Main Menu

35 புலம் பெயர்ந்தோருடன் சென்று கொண்டிருந்த சென்ற படகு கவிழ்ந்து விபத்து

மாக்ரெப் பிராந்தியத்தில் இருந்து கேனரி தீவுகளை நோக்கி 35 புலம்பெயர்ந்தோருடன் சென்று கொண்டிருந்த சென்ற படகு ஒன்று நேற்று (செவ்வாய்க்கிழமை) கவிழ்ந்தது.

இந்த விபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாகவும் 28 பேர் மீட்கப்பட்டனர் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இன்னும் சிலர் காணவில்லை என தெரிவித்துள்ள அதிகாரிகள் படகைத் தேடி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

கேனரி தீவுகளில் குடியேறியவர்களின் வருகை இந்த ஆண்டு 17,000 ஆக உயர்ந்துள்ளது இது கடந்த ஆண்டின் மொத்தத்தின் பத்து மடங்கு இது என்றும் கூறப்படுகின்றது.

திறந்த வெளியில் தூங்கும் ஆயிரக்கணக்கானோரை தங்க வைக்க உள்ளூர் அதிகாரிகள் உதவி கோரியதால், வருகையாளர்களுக்கு தங்குமிடம் கட்ட உதவுவதாக ஸ்பெயின் அரசாங்கம் உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...