Main Menu

திருஞானசம்பந்தர் வித்தியாலயத்தில் புலமைப்பரிசில் சித்தியாளர்கள் கௌரவிப்பு!

2014ம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த வவுனியா
திருஞானசம்பந்தர் வித்தியாலய மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று
(30.10.2014) வித்தியாலயத்தின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.

வித்தியாலயத்தின் அதிபர் கருணாநிதி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், வன்னி
மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடமாகாணசபை உறுப்பினர்கள்
இந்திரராசா, தியாகராசா ஆகியோரும், வவுனியா தெற்கு கல்வி அபிவிருத்தி பிரதி
கல்விப்பணிப்பாளர் ப.தவரட்ணம், வவுனியா தெற்கு ஆரம்பப்பிரிவு உதவிக்கல்வி
பணிப்பாளர் கணேசபாதம், வவுனியா தெற்கு ஆரம்பப்பிரிவு ஆசிரியர் ஆலோசகர்
செ.விஜயகாந்தன் ஆகியோரும், பாடசாலை அபிவிருத்திச்சங்கத்தின் பிரதிநிதிகள்,
ஸ்ரீராமபுரம் கிராம அபிவிருத்திச்சங்கத்தின் பிரதிநிதிகள், அயல் பாடசாலை
அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர்களும் கலந்துகொண்டனர்.

வித்தியாலயத்திலிருந்து தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய 48
மாணவர்களில் இ.திசோன் (171 புள்ளிகள்), மு.சது~h (164 புள்ளிகள்),
ஜெ.டில்ருக்சி (158 புள்ளிகள்) ஆகிய மூன்று மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.
குறித்த மாணவர்கள் மூவரும் பதக்கங்கள், கேடயங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களை பயிற்றுவித்த ஆசிரியர்கள்
திருமதி சி.கணேசலிங்கம், திருமதி கௌ.கேதீஸ்வரன் ஆகியோரும் மாணவர்களின்
பெற்றோரால் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.

மேலும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனின் பன்முகப்படுத்தப்பட்ட வரவு
செலவுத்திட்ட நிதியிலிருந்து வித்தியாலயத்துக்கு போட்டோ பிரதி மெசின் கொள்வனவு
செய்வதற்கு ஒரு இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன்,
வறுமைக்கோட்டின் கீழ் வாழும் 40 மாணவர்களுக்கு பிரான்ஸ் ரி.ஆர்.ரி வானொலி
நேயர்களின் அன்பளிப்பு நிதியிலிருந்து கற்றல் உபகரணங்களும் வழங்கி
வைக்கப்பட்டன.

1-ok

2-ok

3-ok

4-ok

5ok

6ok

7ok

8-ok

9-ok

10-ok

11-ok

12-ok

13-ok

14-ok

15-ok

dsc_0776-ok

பகிரவும்...