Main Menu

உலகில் பிற நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவ தளங்கள் தகர்க்கப்படும்: ஈரான் புதுவித எச்சரிக்கை!

அமெரிக்கா உலகில் பிற நாடுகளில் வைத்து இருக்கும் ராணுவ தளபாடங்களை அவர்களே எதிர்பார்க்காத வகையில் தாக்கி அழிக்க போகிறோம் என்று ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்கா நடத்திய ஆளில்லா விமான ஏவுகணைத் தாக்குதலில், ஈரானிய புரட்சி பாதுகாப்புப் படையின் குட்ஸ் படைப்பிரிவுத் தளபதி காசிம் சோலெய்மனி, ஹஷீத் கிளர்ச்சியாளர் குழுவின் முக்கிய தளபதி அபு மகாதி உள்ளிட்டவர்கள் கொல்லப்பட்ட நிலையில், அமெரிக்கா மீது ஈரான் கடும் கோபத்தில் உள்ளது.

இந்த நிலையில் அமெரிக்கா மீது நேரடி தாக்குதல் நடத்துவதற்கு ஈரானுக்கு வளங்கள் பற்றாக்குறையாக உள்ளபோதும், அமெரிக்காவை பழீதீர்க்க வேண்டுமென்பதில் ஈரான் உறுதியாகவுள்ளது. இதனால் அமெரிக்காவை தாக்க ஈரான் தீவிரமாக யோசித்து வருகின்றது.

இதற்கிடையில், அமெரிக்கா மீது எப்படி தாக்குதல் நடத்த போகிறோம் என்பது குறித்து ஈரானின் முன்னாள் ராணுவ தளபதியும் தற்போதைய பாதுகாப்பு ஆலோசகருமான மேஜர் ஜெனரல் ஹொசைன் டெஹ்ஹான் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘அமெரிக்காவின் ராணுவ தளபாடங்களைத்தான் நாங்கள் தாங்க போகிறோம். உலகம் முழுக்க அமெரிக்காவிற்கு 800 இற்குக்கும் மேற்பட்ட இராணுவ தளபாடம் இருக்கிறது.

அதேபோல் பல நாடுகளின் உங்களுக்கு ஃசேப் ஹவுஸ் எனப்படும் பாதுகாப்பு வீடுகள், தூதரகங்கள் உள்ளது. இதில் பல இலட்சம் அமெரிக்கர்கள் இருக்கிறார்கள். இந்த நாடுகளில் பல நாடுகள் எங்கள் நட்பு நாடுகள். அவர்களிடம் நாங்கள் பேசுவோம்.

இதில் எங்காவது ஒரு இடத்தில் நாங்கள் தாக்குதல் நடத்துவோம். எங்கு தாக்குதல் நடத்துவோம் என்று உங்களால் கணிக்க முடியாது. உங்களால் எல்லா இடங்களையும் கண்காணிக்க முடியாது. அனைத்தையும் பாதுகாக்க முடியாது.

எங்கள் போர் முறை வித்தியாசமாக இருக்கும். அமெரிக்கர்களை கொல்வதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். அது நடந்தே தீரும். ஈரானுக்கு உலகம் முழுக்க தொடர்பு இருக்கிறது. சீக்கிரம் நீங்கள் மிக மோசமான எதிர்ப்புகளை சந்திப்பீர்கள். ஈரான் எப்படி பழிவாங்கும் என்று காத்திருந்து பாருங்கள்’ என கூறியுள்ளார்.

இதேவேளை அமெரிக்கா போரை விரும்பவில்லை என்றும், இதனையும் மீறி ஈரான் அமெரிக்கா மீது தாக்குதல் நடத்தினால், ஈரான் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது.

பகிரவும்...