Main Menu

‘தலைவருக்கு தாதாசாகேப் பால்கே விருது அறிவிக்கப் பட்டிருப்பது மகிழ்ச்சி’ – ரஜினிக்கு மோடி வாழ்த்து

வித்தியாசமான கதாபாத்திரங்கள் மற்றும் கடின உழைப்பால் உயர்ந்த ரஜினிகாந்த பல தலைமுறைகளிடம் பிரபலமானவர் என பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.

இந்திய சினிமாத் துறையில் சிறந்த பங்களிப்பை வழங்குவோருக்கு, மத்திய அரசால் மிக உயரிய விருதான தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்படுகிறது.

அந்த வகையில்  51வது தாதாசாகேப் பால்கே விருது நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நடிகர் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்து ருவிட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, “தலைவருக்கு தாதாசாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

வித்தியாசமான கதாபாத்திரங்கள் மற்றும் கடின உழைப்பால் உயர்ந்த ரஜினி, பல தலைமுறைகளிடம் பிரபலமானவர் என” பதிவிட்டுள்ளார்.

Popular across generations, a body of work few can boast of, diverse roles and an endearing personality…that’s Shri @rajinikanth Ji for you.

It is a matter of immense joy that Thalaiva has been conferred with the Dadasaheb Phalke Award. Congratulations to him.

— Narendra Modi (@narendramodi) April 1, 2021

பகிரவும்...