Main Menu

இலங்கைக்கு எதிராக ஐ.நாவில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை புறக்கணித்தது ஏன் – ஸ்டாலின்

இலங்கைக்கு எதிராக ஐ.நாவில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை புறக்கணித்தது ஏன் என திமு.க தலைவர், ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

அத்துடன் பொல்லாத ஆட்சி என்பதற்கு பொள்ளாட்சியே சாட்சி எனவும் அவர் விமர்சித்துள்ளார்.

கோவை மாவட்டம், மேட்டுபாளையத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து தெரிவித்த அவர், ‘ மத்திய அரசுக்கு அடிமையாக இருப்பதே பழனிசாமியின் குறிக்கோள் எனத் தெரிவித்தார். இந்த அரசாங்கம் கொடை நாட்டில் கொள்ளை அடித்த, கொலை செய்த அரசாங்கம் எனவும் விர்சித்தார்.

அத்துடன் சாத்தான்குளத்தில் இருவரை சிறையில் அடித்து கொன்றது எனவும், 8 வழிச்சாலைக்கு எதிராக போராடியவர்களை தடியடி நடத்தியதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

மேலும் முதல்வர் பழனிசாமிக்கு ஒரு சில கோரிக்கையை வைக்கிறேன். அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறியபடி, சிஏஏ சட்டத்தை ஏற்க மாட்டோம். நீட் தேர்வை திரும்ப பெறுங்கள், வேளாண் சட்டங்களை திரும்ப பெறுங்கள். பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செய்யுங்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளையும் அவர் முன்வைத்துள்ளார்.

பகிரவும்...