Main Menu

டெல்லியில் மீண்டும் வன்முறை: குடியுரிமைச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் மோதல்

குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து டெல்லியின் சீலாம்பூரில் இன்று நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது.

இதன்போது ஏராளமான பேருந்துகள் கல்வீசி தாக்கப்பட்டதுடன், பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கூட்டத்தை கலைத்தனர்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டு தற்போது அது சட்டமாகியுள்ளது.

இந்த சட்டத்தில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் நாடுகளில் இருந்து ஆவணங்கள் இன்றி அகதிகளாக வரும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், ஜெயின் மதத்தினர், பவுத்த மதத்தினர் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்க, இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

அத்தோடு கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் திகதிக்கு முன்பாக வந்துள்ளவர்கள் குடியுரிமை பெறத் தகுதியானவர்களாகக் கருதப்படுவர் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

ஆனால், முஸ்லிம்களுக்கு இந்த சட்டத்தில் இடம் அளிக்கப்படவில்லை. ஈகையால் இந்த சட்டத்துக்கு வடகிழக்கு மாநிலங்களில், மேற்கு வங்கம், டெல்லி ஆகிய மாநிலங்களில் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.

பகிரவும்...