Main Menu

செல்லப்பிராணிகள் இறக்குமதிக்கு தடை விதித்தது உக்ரைன்!

சீனாவிலிருந்து செல்லப்பிராணிகளை இறக்குமதி செய்வதற்கு உக்ரைன் அரசாங்கம் தடை விதித்துள்ளது.

ஹொங் கொங்கில் நாய் ஒன்றுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டதையடுத்தே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள விசேட அறிவிப்பு ஒன்றிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், ‘கொரோனா நோய்க்கிருமியை உக்ரைனுக்கு பரப்புவதால் ஏற்படும் அபாயங்களைக் குறைக்க, உணவுப் பாதுகாப்பு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புக்கான மாநில சேவை, சீன மக்கள் குடியரசில் இருந்து 33 ஆவது பிரிவின் கீழ் செல்லப்பிராணிகளை (நாய்கள், பூனைகள் போன்றவை) மற்றும் மாமிசங்களை இறக்குமதி செய்வதை உக்ரைன் தற்காலிகமாக தடை செய்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிரவும்...