Main Menu

கொரோனாவின் அச்சுறுத்தலினை எதிர் கொள்வதற்காக நிதி ஒதுக்கீடு செய்தது உலக வங்கி!

கொரோனாவின் அச்சுறுத்தலினை எதிர்கொள்வதற்காக ஒரு தொகை நிதியினை ஒதுக்கீடு செய்வதாக உலக வங்கி அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸின் தாக்கம் இதுவரை 67 நாடுகளில் பரவியுள்ளது. இவற்றில் பல நாடுகள் ஏழ்மை நிலையில் உள்ளவை என்பதால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு போதிய நிதி இன்றி தவிக்கின்றன.

இந்த நிலையில் இந்த நாடுகளுக்கு கை கொடுக்கும் வகையில் சுமார் 12 பில்லியன் அமெரிக்க டொலர்களை உதவியாக வழங்கவுள்ளதாக உலக வங்கி அறிவித்துள்ளது.

இந்த நிதி, அவசர உதவியாக கருதப்பட்டு கொரோனா பிடியில் சிக்கியுள்ள ஏழை நாடுகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும் என உலக வங்கி குறிப்பிட்டுள்ளது.

பகிரவும்...