Main Menu

கலிபோர்னியாவில் அவசரகால நிலை பிரகடனம்

கலிபோர்னியா மாநிலத்தில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கத்தினால் முதல் மரணம் பதிவானதைத் தொடர்ந்து குறித்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

சீனாவின் ஹூபே மாகாணத்தில் பரவிய கொரோனா வைரஸ், தற்போது பல நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது.

குறிப்பாக இத்தாலி, இந்தியா போன்ற நாடுகள் குறித்த வைரஸின் தாக்கத்தினால், பெரிதும் பாதிப்புக்குள்ளாகி வருவதாக அந்நாட்டு சுகாதார தலைமை நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

அதுமட்டுமல்லாமல், குறித்த வைரஸ் பிரித்தானியாவின் பல பகுதிகளையும் அச்சுறுத்தி வரும் அதேவேளை, குறித்த கொரோனா வைரஸின் தாக்கத்தில் இருந்து மக்களை காத்துக்கொள்வதற்கு ஏதுவான, வழிமுறைகளை மக்களை பின்பற்றுமாறு பிரித்தானிய அரசாங்கத்தால் அறிவுறுத்தப்பட்டு வருகின்றது.

இதேவேளை, அமெரிக்காவில் கொரோனா வைரஸின் தாக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று கலிபோர்னியாவில் உயிரிழந்த 71 வயதான நபர் குறித்த வைரஸ் தாக்கத்தினால் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையிலேயே, இவ்வெண்ணிக்கையினை அந்நாட்டு சுகாதார திணைக்களம் அறிவித்துள்ளது.

குறித்த மரணமானது அமெரிக்காவின் கலிபோர்னிய மாநிலத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் நிகழ்ந்த முதல் மரணமாக பதிவாகியுள்ளது.

இந்நிலையில், அம்மாநிலத்தில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதேவேளை நாடளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு வெள்ளை மாளிகை அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

ஏற்கனவே அமெரிக்காவின் 16 மாகாணங்களைச் சேர்ந்த 150 பேர் குறித்த வைரஸ் தாக்கத்துக்கு இலக்காகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...