Main Menu

சென்னைக்கு கொண்டு வரப்பட்டது 700 வருடங்கள் பழமையான நடராஜர் சிலை!

அவுஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்ட 700 வருடங்கள் பழமையான நடராஜர் சிலை விரைவு ரெயில் மூலம் சென்னைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

குறித்த சிலை இன்று (வெள்ளிக்கிழமை) சென்னைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

அத்துடன் உரிய சட்ட நடவடிக்கைகளக்குப்பின் கல்லிடைக்குறிச்சி குலசேகரமுடையார் கோவில் நிர்வாகத்திடம் முறைப்படி ஒப்படைக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

சுமார் 700 ஆண்டுகள் பழமையான பஞ்சலோக நடராஜர் சிலை கல்லிடைக்குறிச்சி குலசேகரமுடையார் அறம் வளர்த்த நாயகி கோவிலில் இருந்து கடந்த 1982ஆம் ஆண்டு திருடப்பட்டது.

இவ்வாறு திருடப்பட்ட குறித்த சிலை அவுஸ்திரேலியாவில் உள்ள அருங்காட்சியகம் ஒன்றில் காட்சி பொருளாக வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து நடராஜர் சிலையை மீட்டுக்கும் நடவடிக்கையில் பொன்.மாணிக்கவேல் தலைமையிலான சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவினர் ஈடுபட்ட நிலையில் குறித்த சிலை மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...