Main Menu

ஐ.நா.பாதுகாப்பு சபையை பாகிஸ்தான் தவறாக பயன் படுத்துகிறது – இந்தியா

தீவிரவாதத்தின் முனையமாக பாகிஸ்தான் இருப்பதாகவும், காஷ்மீர் விவகாரம் குறித்து ஏமாற்றும் விதத்தில், சர்வதேச அரங்கில் அடிப்படையற்ற வாதங்களைப் பரப்புகிறது என இந்தியா பாகிஸ்தானுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

ஐ.நா. பொதுக்குழு கூட்டத்தில் காஷ்மீர் விவகாரத்தை பாகிஸ்தானுக்கான ஐ.நா. தூதுவர் மலிஹா லோதி எழுப்பியிருந்தார்.

இதன்போது இந்தியாவின் செயல்கள் அனைத்தும் ஐ.நா.பாதுகாப்புக் கவுன்சிலின் விதிகளை மீறிய செயல்கள் என்றும், காஷ்மீரில் நிலவும் பல்வேறு கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

இதற்கு பதிலடி தரும் வகையில் இந்தியாவுக்கான ஐ.நா. நிரந்தரத் தூதர் சந்தீப் குமார் பேயப், ‘இந்த மதிப்புமிக்க ஐ.நா. சபையை மீண்டும் ஒருமுறை பாகிஸ்தான்  தவறாகப் பயன்படுத்த முயல்கிறது.

அடிப்படை ஆதாரமற்ற, ஏமாற்றும்விதமான பொய்களை என் நாட்டைக் குறித்துப் பேசுகிறார்கள். இதற்கு முந்தைய இவர்களின் முயற்சிகள் வெற்றி பெறவில்லை, இனிமேலும் வெற்றிபெறப் போவதில்லை.

இதில் உண்மை என்னவென்றால், இப்போது பேசிய பிரதிநிதி ஒரு நாட்டைச் சேர்ந்தவர்.  அந்த நாடு தீவிரவாதத்தின் முனையாக இருந்து வருகிறது.

ஐ.நா .பாதுகாப்பு கவுன்சிலின் ஆண்டு அறிக்கை குறித்த விவாதம் என்பது ஒரு சம்பிரதாய முறைக்காகவே இருக்கிறது.  இது மாற்றப்பட்டு, முன்கூட்டியே உறுப்பினர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு விவாதத்துக்கு வழி செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார்.

பகிரவும்...