Main Menu

சுர்ஜித் விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு

ஆழ்துளைக் கிணற்றில் சிக்கி, உயிரிழந்த இரண்டரை வயது குழந்தை சுர்ஜித் விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இன்று (செவ்வாய்க்கிழமை) தொடரப்பட்ட குறித்த மனுவில், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவம் நடைபெறாமல் தடுக்க உச்சநீதிமன்றம் வகுத்த விதிமுறைகளை பின்பற்ற கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

குறித்த மனு விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

மணப்பாறை , நடுக்காட்டுப்பட்டியில்  கடந்த வெள்ளிக்கிழமை மாலை வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த ஆரோக்கியதாஸின் இரண்டரை வயது குழந்தை சுர்ஜித், பராமரிப்பின்றி திறந்த வெளியில் இருந்த சுமார் 350 அடி ஆழ ஆழ்துளைக் கிணற்றில் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்தது.

இதுகுறித்து தகவலறிந்த மணப்பாறை தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

குழந்தை குழிக்குள் விழுந்ததில் இருந்தே ஆட்சியர், அமைச்சர்கள் நடுக்காட்டுப்பட்டியிலேயே முகாமிட்டு மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தி வந்தனர்.

ஆழ்துளைக் கிணற்றில் சிக்கிய இரண்டரை வயது குழந்தையை மீட்கும் பணிகள், 80 மணி நேரமாக நடைபெற்று வந்த நிலையில் இரவு 2.30 மணியளவில் உடல் சிதறிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட குழந்தை சுர்ஜித்தின் உடல், பொதுமக்கள் அஞ்சலிக்கு பிறகு அடக்கம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...