Main Menu

ஜனாதிபதி மைத்திரியின் அரசியல் தீர்மானம் குறித்து அறிவிப்பு!

எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலை அடுத்து தனது பதவிக்காலம் நிறைவடைந்த பின்னரும் தொடர்ந்தும் அரசியலில் ஈடுபடவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நேற்று மாலை தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில், ஓய்வுபெறும் வரை அரசியலில் தான் தொடர்ந்தும் செயற்படப் போவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக அவர் ஜனாதிபதி பதவியில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர் தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் செல்வார் என்ற ஊகங்கள்படி, தேசிய பட்டியல் மூலம் நாடாளுமன்றத்திற்குள் நுழைய அவர் திட்டமிட்டுள்ளார் என்பதற்கான தெளிவான அறிகுறியாக அவரது பதிவு அமைந்துள்ளது.

இதற்கிடையில், ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன என்ற கூட்டணியை உருவாக்க சுதந்திர கட்சி மற்றும் பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகளுக்கிடையில் எதிர்வரும் 31 ஆம் திகதி ஒப்பந்தமொன்றும் கைச்சாத்திடப்படவுள்ளது.

இந்த கூட்டணியின் இணைத் தலைவர்களாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவும் நியமிக்கப்படவுள்ளதாக நேற்று தயாசிறி ஜயசேகர தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Maithripala Sirisena@MaithripalaS

විවේක සුවයට වඩා
සක්‍රීය දේශපාලනයට මා ඇලුම් කරමි.

View image on Twitter

6851:23 PM – Oct 28, 2019Twitter Ads info and privacy230 people are talking about this

பகிரவும்...