Main Menu

சீனத் தரப்பை காயப் படுத்துவதற்கு காரணம் ஆனவர்களுக்கு எதிராக எதிர் நடவடிக்கைள் உண்டு!

சீனத் தரப்பை காயப்படுத்துவதற்கு காரணமானவர்களுக்கு எதிராக சீனா எதிர் நடவடிக்கைகளை எடுக்கும் என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அமைச்சின் செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் கூறுகையில், ‘அமெரிக்கா விசாக்களை சீனாவிற்கு எதிரான ஆயுதமாகப் பயன்படுத்தியுள்ளது. இது சீனாவின் உள் விவகாரங்களில் கடுமையாக தலையிட்டுள்ளது’ என கூறினார்.

சீன அதிகாரிகள் மீதான கூடுதல் அமெரிக்க விசா தடைக்கு பதிலளிக்கு வகையில், அவர் இந்த கருத்தினை வெளியிட்டுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பதவிக்காலத்தின் இறுதி மாதத்தில் பெய்ஜிங்கிற்கு எதிராக மேலதிக நடவடிக்கை எடுத்து, மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சீன அதிகாரிகள் மீது அமெரிக்கா திங்களன்று கூடுதல் விசா கட்டுப்பாடுகளை விதித்தது.

மதச் செயலாளர்கள், இன சிறுபான்மை குழுக்கள், அதிருப்தியாளர்கள் மற்றும் பிறரை அடக்குவதற்கு பொறுப்பானவர்கள் அல்லது உடந்தையாக இருப்பதாக நம்பப்படும் அதிகாரிகள் மீது இந்த தடை விதிக்கப்படுவதாக அமெரிக்கா கூறியது.

இதுதொடர்பாக மைக் பொம்பியோ கூறுகையில், ‘சீனாவின் சர்வாதிகார ஆட்சியாளர்கள் சீன மக்களின் கருத்து சுதந்திரம், மதம் அல்லது நம்பிக்கை, சங்கம் மற்றும் அமைதியான கூட்டத்திற்கான உரிமை ஆகியவற்றில் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கின்றனர்.

இதுபோன்ற மனித உரிமை மீறல்களைச் செய்பவர்கள் நம் நாட்டில் வரவேற்கப்படுவதில்லை என்பது அமெரிக்காவுக்குத் தெளிவாகத் தெரிகிறது ‘என தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று, ஹொங்கொங்கிற்கான பெய்ஜிங்கின் தேசிய பாதுகாப்புச் சட்டம், வர்த்தகம் மற்றும் உளவு போன்ற பிரச்சினைகள் குறித்து உலகின் முதல் இரண்டு பொருளாதார சக்திகளுக்கான உறவில் பல தசாப்தங்களாக மோதல் நிலவிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...