Main Menu

சிவாஜி, அநுரவைவிடவும் வடக்கில் அதிக வாக்குகளைப் பெற்றுள்ளார் ஆரியவன்ச திசாநாயக்க

2019ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் தற்போது வெளிவந்தவண்ணம் உள்ளன. இதுவரையில் வெளியான தேர்தல் முடிவுகளில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலை பெற்றுள்ளார்.

இந்நிலையில், இந்த தேர்தலில் அதிக கவனத்தை ஈர்த்தவர் ஆரியவன்ச திசாநாயக்க என்பவரே. ஏனென்றால் இவர் வடக்கில் அதிக வாக்குகளைப் பெற்றுள்ளார். அநுரகுமார திசாநாயக்க, சிவாஜிலிங்கத்தை விடவும் அதிக வாக்குகளில் முன்னிலைப் பெற்றுள்ளார்.

குறிப்பாக காங்கேசன்துறையில்  586 வாக்குகளைப் பெற்றுள்ளார். அங்கு சிவாஜிலிங்கம் 475 வாக்குகளை மாத்திரமே பெற்றுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
அதேபோன்று யாழ்ப்பாணத்தில் அவர் 288 வாக்குகளைப் பெற்றுள்ளார். எப்படி இந்த நிலையை எட்டினார்? என்பது அனைவர் மத்தியிலும் கேள்விகளை எழுப்பியுள்ளது.

அவரது சின்னம் கழுகு என்பதால், அன்னப்பட்சிக்கும், கழுகிற்கும் வித்தியாசம் தெரியாமல் அவருக்கு புள்ளடியிட்டிருக்கலாமென அரசியல் ஆர்வளர்கள் தெரிவிக்கின்றனர்.

பகிரவும்...