Main Menu

சாட் நாட்டில் மோதல்களால் 42 பேர் பலி

ஆபிரிக்க நாடான ‘சாட்’டில் இரு சமூகங்களுக்கு இடையிலான மோதல்களால் குறைந்தபட்சம் 42 பேர் உயிரிழந்துள்ளனர் என அந்நாட்டின் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு இன்று தெரிவித்துள்ளது.

சாட்டின் கிழக்குப் பிராந்தியத்தித்திலுள்ள குவாதை மாகாணத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

திலேகுவே எனும் கிராமத்தின் பெரும்பகுதி தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாகவும் அவ்வமைச்சு தெரிவித்துள்ளது.

இம்மோதல்களில் சம்பந்தப்பட்டவர்கள் யார் என்பதை அவ்வமைச்சு தெரிவிக்கவில்லை. 

ஆனால், அப்பிராந்தியத்தில் பயிர்ச் செய்கையாளர்களுக்கும் கால்நடை வளர்ப்பாளர்கள் மற்றும் ஏனைய குழுக்களுக்கும் இடையில் அடிக்கடி மோதல்கள் நடைபெறுவது வழக்கம். 

பகிரவும்...